சென்னை கோயம்பேட்டில் வீட்டில் தனியே இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் மந்தைவெளி தெருவை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி, கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் சரஸ்வதி தனியே இருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலசுந்தரம் என்ற 60 வயது முதியவர் சரஸ்வதியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மதுபோதையில் இருந்த பாலசுந்தரத்தை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலசுந்தரத்தை கைது செய்த கோயம்பேடு போலீசார் அவரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பாலசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார்.