சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வனிதா விஜயகுமாருடன் திருமணக் கோலத்திலிருந்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இது படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட படம் என்று வனிதா தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை வடபழனியில் பேட்டியளித்த வனிதா, “பவர் ஸ்டாருடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம், திரைப்படத்துக்கானது. விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது. எனக்கு பவர் ஸ்டாரின் நகைச்சுவை உணர்வு மிகவும் பிடிக்கும். நட்பு அடிப்படையில் பவர் ஸ்டார் இதில் நடித்துள்ளார்.”
“போட்டோ ஷூட்காக திருமண கோலத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது. என்ன நினைத்து அதை பதிவிட்டேனோ, அது நடந்துள்ளது . அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இரண்டு நடிகர்கள் ஒன்று சேர்ந்து புகைப்படம் வெளியிட்டால் அதை திருமணம் என்பதா?. தனிப்பட்ட முகங்களை கடந்து, எங்களுக்கு தொழில் முகம் என்றும் உள்ளது. இதை சர்ச்சையாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு மிகவும் முக்கியம்.”
“தைரியம் இருந்தால் மட்டுமே நாட்டில் பிழைக்க முடியும். உயிரிழப்பு , பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றைக் கடந்துதான் பெண்கள் வர முடிகிறது. இன்றைய சினிமாவில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகும் முதன்மை காதாப்பாரத்தில் நடிப்பது நம்பிக்கையைத் தருகிறது. பெண்களை தனிப்பட்ட முறையில் யாரும் மட்டம் தட்டக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை.”
“ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் அதை யாரும் பேசுவதில்லை. ஆனால் பெண்களை பேசுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். நான் 4 கல்யாணம் அல்ல ; 40 கல்யாணம் பண்ணுவேன். ஆனால் விமர்சனங்களுக்கு நான் அச்சப்பட மாட்டேன். எதுவாக இருப்பினும், பொதுவெளியில் அதை நான் பகிர்வேன்.” என்று கூறியுள்ளார்.”
வனிதாவை தொடர்ந்து பேட்டியளித்த நடிகர் பவர் ஸ்டார், “ஒரு போஸ்டர் வைரலாக பரவியிருக்கிறது. சம்பளமே வாங்காமல் இதில் நடித்து வருகிறேன். கல்யாணம் ஆவதெல்லாம் கடவுள் கையில்தான் உள்ளது. எனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதும் ஆண்டவன் கையில்தான் உள்ளது. நடிகர் – நடிகை என்ற முறையில் தான் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. பலரின் வாழ்த்து உண்மையானால், அது மகிழ்ச்சியே. எனது லத்திகா படம் 350 நாட்கள் ஓடியது. அதுபோல், இந்த படத்தையும் 300 நாள் ஓடவைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.







