ஏ.ஆர் ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளுபடி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் எதிர்பார்த்த அளவு…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தியதில் எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்டவில்லை என கூறி சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையில், நிகழ்ச்சி லாபகரமாக இல்லை என்பதற்கு தான் பொறுப்பில்லை என்றும் தனக்கு பேசப்பட்ட தொகையை கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வழங்கவில்லை என்றும் ஏ.ஆர் ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கு தொடர்பாக தொடர்பாக மனுதாரர் எந்த விளக்கமும் நீதிமன்றத்திற்கு அளிக்காத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.