ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோ

ஒரு நபர் தனது காதலிக்கு பெயின்டிங் மூலம் பிரபோஸ் செய்து, தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளது. காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு எப்படியாவது தனது காதலை தெரிவிக்க வேண்டும்…

ஒரு நபர் தனது காதலிக்கு பெயின்டிங் மூலம் பிரபோஸ் செய்து, தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளது.

காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு எப்படியாவது தனது காதலை தெரிவிக்க வேண்டும் என்ற துடிப்பு எப்போதுமே இருக்கும். அதிலும் குறிப்பாக, ஆண்கள் தங்கள் காதலியிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று பல முயற்சிகளை வித்தியாச வித்தியாசமான சிந்தனைகளோடு மேற்கொள்வார்கள். பொதுவாகவே நேசிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் போது அவருக்கு பிடித்த
இடத்தில், ரம்மியமான ஒரு சூழலில் காதலை தெரிவிக்க ஆண்கள் எண்ணுவதோடு, அது ஒரு கேண்டில் லைட் டின்னராகவோ அல்லது மாலை நேரத்தில் கடற்கரை காற்றுடன் கூடிய நிலவு எட்டிப்பார்க்கும் நேரத்திலோ அல்லது தனது காதலிக்கு பிடித்தமான இடத்தை தேர்வு செய்தோ தான் தனது காதலை பிரபோஸ் செய்வார்கள்.

ஆனால், இங்கு ஒரு நபர் தனது காதலிக்கு ஓவியத்தின் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளது. இது பார்க்க கொஞ்சம் வேடிக்கையானதாக இருந்தாலும், அந்த ஆணின் சிந்தனை சினிமாவை மிஞ்சிய செயலாகவே நமக்கு தோன்றும். அந்த வீடியோவில் ஆண் மற்றும் அவரது காதலி இருவரும் தங்களது ஓவியத்தை மேடையில் நின்று சக மாணவர்களிடம் காட்டுகிறார்கள். அந்த பெண் தனது ஓவியத்தைக் காட்டும் போது, ​​ஆண் “என்னை திருமணம் செய்து கொள்வாயா” என்று எழுதப்பட்டுள்ள வரிகளை ஓவியமாக மேடையில் காட்டுகிறார்.

கீழே உள்ள அனைவரும் அந்த பிரபோஸல் ஓவியத்தை பார்த்தபோதும், மேடையில் இருந்த அந்த பெண் கவனிக்கத் தவறிவிடுகிறாள். அவள் தனது ஓவியத்தை சுற்றிக் காட்டத் தொடங்கும் போதுதான் , இறுதியாக நிலைமையை உணர்ந்து அந்த நபர் வரைந்த ஓவியத்தை பார்த்து உணர்ச்சிவசப்படுவதோடு அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ கிட்டத்தட்ட 10.8 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதோடு, 1.6 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் பல்வேறு கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.