முக்கியச் செய்திகள்

தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

திருமணத்துக்காக மளிகை பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய புதுமாப்பிள்ளையின் மீது தனியார் பேருந்து மோதியதில்உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச்
சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (24). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவருக்கு மே 26ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், வீரமணி நேற்று இரவு 11 மணியளவில் திருமணத்துக்காக
விருத்தாசலத்தில் மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொண்டு விருத்தாசலம் – கடலுார் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கூரைப்பேட்டையில் உள்ள தனியார் நர்சரி கார்டன் அருகே சென்றபோது, கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, வீரமணியின்
வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இதில், பலத்த காயமடைந்த வீரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டு நாள்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2ஜி ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை-அண்ணாமலை

Web Editor

‘தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓபிஎஸ்’ – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

Arivazhagan Chinnasamy

குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

Web Editor