முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

ரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்

ரயில்வே ஸ்டேஷனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையில் சாக்கிநாக்கா பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பை அருகே உள்ள உல்லாஸ்நகரில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்திருப்பது பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பி இருக்கிறது.

உல்லாஸ்நகர் ரயில்வே ஸ்டேஷனின் ஸ்கைவாக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 வயது சிறுமி ஒருவர், தனது பிரண்ட்ஸுடன் வந்துகொண்டிருந்தார். அப்போது கையில் சுத்தியல் வைத்திருந்த இளைஞர் ஒருவர், சிறுமியின் பிரண்ட்ஸ்களை மிரட்டி விரட்டினார். பின்னர் அவரை அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகும் அவரை வெளியே விடாமல் அடைத்து வைத்தார்.

சனிக்கிழமை காலை அங்கிருந்து வெளியே விடாத அந்த இளைஞர் சிறுமியை தாக்கி யுள்ளார். பிறகு காலையில் அங்கிருந்து தப்பி வந்து, ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி, உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீஸில் புகார் செய்யுமாறு கூறியதை அடுத்து, காவல் நிலையம் சென்றார். ஆனால், எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி, 2 போலீஸ் ஸ்டேஷன்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டன.

பின்னர் 12.30 மணியளவில் ரயில்வே போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்தனர். சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது, உல்லாஸ் நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கெய்க்வாட் என்ற தாதா என்பது தெரியவந்தது. இவர் மீது, தானே காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் ஏற்கனவே உள்ளன. பின்னர் அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த ரயில்வே ஸ்டேஷனில் கேமரா பொருத்தப்படவில்லை.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Advertisement:
SHARE

Related posts

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

Vandhana

விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!

Gayathri Venkatesan

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

Hamsa