முகநூல் பழக்கத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் இளைஞர் ஒருவர். அவரை ஏமாற்றிய ஜகஜாலகில்லாடி யார்? போலீசிடம் சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம்.
கேட்கும் நமக்கே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் இந்த மிரட்டலுக்குக் காரணம் பேஸ்புக் பழக்கம். இதில் கொடுமை என்னவென்றால் ஐயப்பனின் நண்பன் முகுந்தன் எனக் கூறி போனில் மிரட்டியது சாட்சாத் ஐயப்பனேதான். ஸ்மார்ட்போனில் உள்ள குரல் மாற்றும் ஆப்கள் மற்றும் காவல்துறை பயன்படுத்தும் வாக்கி டாக்கி, வயர்லெஸ் போன்ற சத்தங்களை யூடியூப் மூலம் பதிவிறக்கம் செய்து, ஐயப்பனின் நண்பர், போலீஸ் என பல்வேறு கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளார் ஐயப்பன்.
தொடக்கத்தில் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் என மிரட்டிப் பணம் வசூலித்து வந்த ஐயப்பன், ஒரு கட்டத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கேட்க, செய்வதறியாமல் திகைத்த தினேஷ், விஷமருந்தி உயிரிழப்பு க்கு முயன்றிருக்கிறார். ஒரு வழியாக அவரைக் காப்பாற்றிய தாயிடம் தினேஷ் நடந்ததை சொல்ல, அதன் பிறகே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, தினேஷ் பணத்தைத் தயார் செய்து விட்டதாகச் சொல்ல, பணத்தை வாங்க தினேஷின் ஊருக்கு வந்த ஐயப்பன் என்கிற முகுந்தனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். 4 லட்ச ரூபாய் வரை கொடுத்த தினேஷ், அதுவரை ஐயப்பனின் புகைப்படத்தைக் கூட பார்த்தது கிடையாது.
தினேஷ் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிக்கும் வெள்ளந்தியான இளைஞர்களைக் குறி வைத்து 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ஐயப்பன் மோசடி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சமூக வலைதளங்கள் மூலமாக அறிமுகமாகும் கண்ணுக்குத் தெரியாத நபர்களைக் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.







