முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

முக அடையாளம் காணும் வசதியை ரத்து செய்த பேஸ்புக்!

முக அடையாளம் காணும் சேவையை நிறுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கிறது பேஸ்புக். உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக செயலிகளையும் நிர்வகித்து வரும் பேஸ்புக், சமீபத்தில் தனது பெயரை மெட்டா என்று மாற்றியது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், பயனர்களுக்கு வழங்கி வந்த, முக அடையாளம் காணும் ( facial recognition) சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதி காரணமாக, புகைப்படங்கள், வீடியோக்களில் உள்ள முகத்தை தானாகவே பேஸ்புக் அங்கீகரித்துவிடும்.

பிறகு, உங்கள் முக ரேகை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பேஸ்புக்கில் பதி வேற்றப்பட்டால் இது குறித்த தகவல்களை உங்களுக்கும் தெரிவிக்கும். இதனால், பயனர் களின் தனியுரிமைப் பாதிக்கப்படுவதாக பலர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்த சேவையை பேஸ்புக் ரத்து செய்துள்ளது.

இனி, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களில் தானாகவே முகங்களை அடையாளம் காணாது என்றும் 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா

Halley karthi

MBBS, BDS மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

Saravana Kumar

காஷ்மீருக்குள் ஊடுருவக் காத்திருக்கும் 140 பயங்கரவாதிகள்: அதிகாரிகள் தகவல்

Gayathri Venkatesan