டெல்லியில் மோமோஸ் சாப்பிட்ட நபர் பலி: எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை

மோமோஸ் சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, மோமோஸை நன்றாக மென்று சாப்பிடுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோமோஸை சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில்…

மோமோஸ் சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, மோமோஸை நன்றாக மென்று சாப்பிடுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோமோஸை சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சுவாசக் குழாயில் மோமோஸ் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். எனினும், அவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக இதயச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிவுறுத்தலில்,  “மோமோஸை விழுங்குவதற்கு முன் சரியான முறையில் மென்று சாப்பிட வேண்டும்.  மோமோஸ் என்ற உணவு கொழுக்கட்டை போன்ற உணவாகும். அவை வழக்கமாக வேகவைக்கப்படுகின்றன. டெல்லியைச் சேர்ந்தவர்கள் மோமோஸை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாலையோரக் கடைகளிலும், நகரம் முழுவதும் உள்ள உயர்தர உணவகங்களிலும் இந்த உணவு கிடைக்கிறது.
மணிகண்டன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.