தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வருகிறது – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று கூடுதலாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று 10-க்கும் மேற்பட்ட…

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று கூடுதலாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகரிப்பதாகவும், குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இன்றைக்கு கூடுதலாக தொற்று எண்ணிக்கை 5 மாவட்டங்களில் ஈரிலக்க பாதிப்பு என்ற வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கூடுதலாக இருக்கிறது என்றார்.

 

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பட்டதாகவும், தமிழ்நாடு முழுதும் வீடுகளில் மற்றும் மருத்துவமனையில் 1622 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் மட்டும் 781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மிதமான தொற்று பாதிப்பில் உள்ளனர். சென்னையில் 59 பேர் தொற்று மற்றும் இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திற்கான இணை சுகாதார அதிகாரிகள் உடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்பதாகவும், தற்காலிகமாக 3,418 மாநகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலை கழகம், ஐ ஐ டி, சத்ய சாய் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியமாக பாதிப்புகள் இருந்தவை குறைக்கப்பட்டு தற்போது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் 29 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஓரிரு நாட்களில் சரி ஆக வாய்ப்பு உள்ளது. சென்னையில் 46 தெருக்களில் 3-க்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் 6 தெருக்களில் 5-க்கு மேற்பட்ட நபர்களுக்கு பாதிப்பு உள்ளது. இவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டபட்டு உள்ளது. கூடுதலாக பரவல் இருப்பதனால் எச்சரிக்கை பலகை வைக்க பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2,500 RTPCR பரிசோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது. நாளை முதல் 5 ஆயிரம் RTPCR பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

 

வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களில் 1301 பேர் மட்டுமே பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை 84.85 சதவிகிதமாக இருந்தாலும் சென்னை மாநகராட்சி 85.85 சதவிகிதமாக தொற்று பாதிப்பு உயர்ந்து முன்னிலை வகிப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னையில், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையை பொறுத்த வரை படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளது, பராமரிப்பு மற்றும் உடனடி சிகிச்சைக்கு மருத்துவமனைகளும் தயாராக உள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து தான் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், முக கவசம் அணிவது கட்டாயம் தான் என்றும் அந்த விதிமுறைகள் நடைமுறையில்தான் உள்ளது என்றும் கூறினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.