முக்கியச் செய்திகள் குற்றம்

கேளம்பாக்கம் அருகே பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் கைது

பெட்ரோல் பங்கில் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேன்னில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு யாரும் இல்லாத நேரத்தில் பெண்ணின் மீது ஊற்றி விட்டு மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கைதான நபர் வாக்குமூளம்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகன்யா.38, இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். 13 வயதில் ஒரு பெண் குழந்தை, 11 வயதில் ஒரு பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை கிடைக்கும்போது வந்து செல்வதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சுகன்யா புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் வாடகை இடத்தில், ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 7 ம் தேதி இரவு 8:15 மணிக்கு வேலை செய்து கொண்டிருந்த போது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து என்று சொல்லப்பட்டது.

இதில், சுகன்யா 100 சதவீதம் தீக்காயம் அடைந்தார். அதே பகுதியை சேர்ந்த அருண்.21, லெனின்.58 ஆகிய இருவரும் சுகன்யாவை மீட்டெ சென்றதால் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் சிறுசேரி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீக்காயங்களுடன் சுகன்யா 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் படூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவருக்கு 25 சதவீதம் மற்றோருவருக்கு 15 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சுகன்யா 8 ம் தேதி காலை 5:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபாத் உயிரிழந்தார். இந்நிலையில், சுகன்யா சிகிச்சையிலிருந்த நேரத்தில், மருத்துவர்களிடம் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர் என்று மருத்துவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் பெட்ரோல் பட்டு தீ ஏற்பட்டதாக மருத்துவர்கள் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் அறிக்கை அனுப்பினர்.

இதனால் கேளம்பாக்கம் போலீசார்  உயிரிழப்பா, கொலையா, விபத்தா என பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல் வங்கிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் அதேபகுதியைச் சேர்ந்த குமார்.56 என்பவர் கடையிலிருந்து வெளியே சென்றதும். பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் வாங்கிச் சென்றதும் பவாகியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியை நெருங்கிய நிலையில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தி வந்த நிலையில் இன்று காலை அதே பகுதி சேர்ந்த குமார் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

விசாரணையில், குமார் என்பவர் சுகன்யாவிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் பழகி வந்தாகவும் ஒரு கட்டத்தில் ஒருதலைப்பட்சமாக குமார் சுகன்யா மீது ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வெளிப்படையாக சுகன்யாவிடம் பேசும்போது சுகன்யா மறுப்பு தெரிவித்துள்ளார். குமாரின் நடவடிக்கையை பிடிக்காத, சுகன்யா குமாரின் மனைவி மற்றும் மகனிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக குமாரிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் , ஆத்திரமடைந்த குமார் சம்பவத்தன்று புதுப்பாக்கம் பெட்ரோல் பங்கில் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேன்னில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு ஜெராக்ஸ் கடை அருகில் உள்ள தனது மகனின் எலக்ட்ரிக் கடையில் காத்திருந்தார் யாரும் இல்லாத நேரத்தில் இரவு சுமார் 8 மணி அளவில் கேனில் பெட்ரோலுடன் சென்று 5லிட்டர் பெட்ரோல் கேன் கடைக்குள் வீசி விட்டு கையில் பிளாஸ்டிக் பாடலில் கொஞ்சம் பெட்ரோல் வைத்திருந்ததை சுகன்யாவின் மீது ஊற்றி விட்டு மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். என்று காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதில் கடை முழுவதும் பரவியதுடன் ஸ்கேனில் இருந்த பெட்ரோல் வெடித்து புகை மண்டலமாக மாறியது இதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அதில் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இது குறித்து கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வங்கிகளில் கேன்களில் பெட்ரோல் கொடுக்கக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது இந்நிலையில் தற்பொழுது 56 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு 5லிட்டர் பெட்ரோல் கொடுத்துள்ளதும் இதனால் புதுப்பாக்கம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram