முக்கியச் செய்திகள் தமிழகம்

பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரயில் -உற்சாக வரவேற்பு

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் பெங்களூரூவிலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

பெங்களூரூவிலிருந்து வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடைந்தது. சென்னை, இந்தியாவில் 5-வது வந்தே பாரத் ரயிலைச் சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் பிரதமர் மோடி பெங்களூரு கே எஸ் ஆர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (நவம்பர் 11) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையிலிருந்து காலை 5.50 மணி புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடைந்தது. பெங்களூரூவிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது வந்தே பாரத் ரயில்.

சென்னை வந்த வந்தே பாரத் ரயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வந்தே பாரத் ரயிலை வரவேற்றார். மேலும் வந்தே பாரத் ரயிலுக்கு மேளம் தாளம் இசைத்து மலர்கள் தூவி மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கொடி அசைத்து வந்தே பாரத் ரயிலை வரவேற்றனர்.

சென்னை – மைசூரு – வந்தே பாரத் ரயில் கட்டண விவரம்: 

வந்தே பாரத் பொறுத்த வரை இரண்டு பிரிவுகளாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி சென்னை டு மைசூர் இடையான வழித்தடங்களில் கட்டண விவரங்கள் பின்வருமாறு. சென்னை – மைசூரு: chair car – ரூ.1200 executive car – ரூ.2295; சென்னை – காட்பாடி chair car – ரூ.495 executive car – ரூ.950; சென்னை – கேஎஸ்ஆர் பெங்களூரு chair car – ரூ.995 executive car – ரூ.1885; கேஎஸ்ஆர் பெங்களூரு – மைசூரு chair car – ரூ.515 executive car – ரூ.985

வந்தே பாரத் ரயில் – பயண அட்டவணை:

இந்த ரயிலில் சென்னையிலிருந்து 4.05 மணி நேரத்தில் பெங்களூரு வந்தடையலாம். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் (புதன்கிழமை தவிர) காலை 5.50 மணிக்கு வந்தேபாரத் அதிவிரைவு ரயில் புறப்பட்டு காட்பாடிக்கு காலை 7.21 மணிக்கு வரும். 4 நிமிடங்கள் அங்கு நின்றுவிட்டு காலை 7.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 8.25 க்கு ஜோலார்பேட்டை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வரும்.

ஆனால் அங்கு ரயில் நிற்காது. அந்த ரயில் காலை 10.15 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும். அங்கு 5 நிமிடங்கள் நிற்கும் ரயில் 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.20 மணிக்கு மைசூருவுக்கு சென்றடையும். இந்த ரயிலில் சென்னையிலிருந்து 4.05 மணி நேரத்தில் பெங்களூரு வந்தடையலாம். அதே போல் மறுமார்க்கமாக வந்தேபாரத் ரயில் பகல் 1.05 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வரும்.

5 நிமிடங்களுக்கு பிறகு அந்த ரயில் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும். மாலை 5.36 மணிக்கு காட்பாடிக்கு வரும் ரயில், அங்கு 3 நிமிடங்கள் மட்டும் நின்றுவிட்டு 5.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரெயில் மூலம் மைசூருவில் இருந்து 1.45 மணி நேரத்தில் பெங்களூருவுக்கு வர முடியும். விமானத்தில் இருக்கும் அதிநவீன வசதிகள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளது. பயணிகளுக்கு விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இந்த ரெயில் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் பயணிக்கும் திறன் கொண்டது.

வந்தே பாரத் ரயில் -சிறப்பு அம்சங்கள்:

ரயில் முழுவதும் ஏசி வசதி, wifi வசதி, டிஜிட்டல் வசதி, தானியங்கி கதவு, சுழலும் இருக்கை, உணவு வசதி. ரயில் வேகமாக செல்லும்போது அதிருமே என்ற பயம் இருக்கா வானம் அதிர்வு குறைவு வசதி உள்ளது. வந்தே பாரத் ரயில் முழுவதுமாக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சென்னை ஐசிஎப் (Icf) முழுவதுமாக வடிவமைத்தது.

தற்போது 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்படுகிறது.விரைவில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்படும். ரயில் செல்லக்கூடிய வழித்தடங்களில் இருக்கும் தண்டவாளங்களில் பெரிய அளவில் தண்டவாள தடுப்பு வேலிகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. வேகத்தை அதிகரிப்பதில் இதை தவிர எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. மார்ச்,ஏப்ரல் மாதத்தில் அனைத்து இடற்படுகளும் சரி செய்யப்பட்டு மே மாதம் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

அவ்வாறு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் பட்சத்தில் தற்போதைய பயண நேரத்தை விட கிட்ட தட்ட ஒரு மணி நேரம் முன்னதாகவே இலக்கை சென்றடையும். தற்போது 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால் சதாப்தி ரயிலை விட 20 நிமிடம் முன்னதாக செல்லும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பல்கேரிய பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

Halley Karthik

சமத்துவம், சகோதரத்துவம், பாசம்தான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம்:ராகுல் காந்தி!

EZHILARASAN D

”பொங்கல் விழாவால் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்தது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

G SaravanaKumar