முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மர்மநபர்கள் தள்ளிவிட்டதால் மமதா பானர்ஜி காலில் காயம்!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மமதா பானர்ஜியை கூட்டத்தில் இருந்த சிலர் தள்ளிவிட்டதால் அவருடைய காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு காரில் ஏற முயன்றபோது நான்கு அல்லத ஐந்து பேர் தன்னை தள்ளிவிட்டதாக அவர் கூறியுள்ளார். வலி தாங்க முடியாமல் காலை அழுத்தி பிடித்தபடியை இதனை அவர் செய்தியாளர்களிடம் கூறினார். வலி தாங்க முடியாமல் துடித்த மமதாவை அவருடைய உதவியாளர் தூக்கி காரின் பின்பக்க இருக்கையில் அமரவைத்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மமதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மமதா மீதான இந்த தாக்குதல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வினி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் “தேர்தலுக்கான மமதா பானர்ஜி இவ்வாறு நாடகமாடுகிறார். நந்திகிராம் தொகுதியில் அவர் வெற்றிபெற வாய்ப்புகள் குறைவு என்பதை உணர்ந்த காரணத்தால்தான் மமதா இவ்வாறு நடந்துகொள்கிறார்” என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் அர்ஜூன் சிங்,“ இது மமதாவின் தேர்தல் நாடகமே. அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வரும்போது ஏராளமான காவல் துறையினர் அவருடன் இருந்துள்ளனர். நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். பாதுகாப்பு அம்சங்கள் இந்தளவுக்கு இருக்கும்போது எப்படி ஒருவர் மமதாவின் அருகே சென்றிருக்கமுடியும். அப்படித் தாக்கப்பட்டு இருந்தால் ஏன் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் மமதாவின் அண்ணன் மகன் அபிஷேக் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் மமதா பானர்ஜி மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு“ மே 2 அன்று வங்க மக்களின் சக்தியை பாஜக பார்க்கத்தான்போகிறது. பாஜக மக்களை தூண்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

ஜெயலலிதா கோயில் சேவை மையமாகவும் செயல்படும்: ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya

மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

மக்கள் பிரச்னை 48 மணிநேரத்தில் தீர்க்கப்படும் – மகேந்திரன்

Gayathri Venkatesan