அரசியல் பேசி மக்களை கவர் பண்ண ”மாமன்னன்” – முழு விமர்சனம் இதோ!!

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது மாமன்னன் திரைப்படம். இத்திரைப்படம் பேசும் அரசியல் மற்றும் படத்தின் கதை பற்றி பார்க்கலாம். படத்தின் கதை பகத் பாஸிலின்…

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது மாமன்னன் திரைப்படம். இத்திரைப்படம் பேசும் அரசியல் மற்றும் படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.

படத்தின் கதை

பகத் பாஸிலின் அப்பாவிற்கு தொண்டனாக வேலை செய்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார். உதயநிதி இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கோச்சிங் சென்டரை பகத் பாஸிலின் அண்ணன் சேதப்படுத்துகிறார். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வரும் இடத்தில் வடிவேலுவை நிற்க வைத்து பேசுகிறார் பகத்.

என்னதான் எம்எல்ஏவாக இருந்தாலும் சமமாக உட்கார்ந்து பேச கூடாது. ஒரு தொண்டன் எப்போதும் தொண்டன் தான் என்ற கொள்கையை பின்பற்றுபவர் பகத். இப்படி இருக்கையில் உதயநிதி ஒருமுறை பகத் பாஸிக்கு எதிராக வடிவேலுவை அமரவைத்து விடுகிறார். இதற்காக வடிவேலுவையும் உதயநிதியையும் பழிவாங்க பகத் பாசில் எடுக்கும் வன்முறை தான் படத்தின் மீதி கதை.

வடிவேலுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பகத் பாஸில் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. அட்டகாசமான நடிப்பு. ஸ்கிரீனில் வரும் ஒவ்வொரு சீனிலும் பயங்கரமாக ஸ்கோர் செய்கிறார். உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் மிகப்பெரிய வரலாற்றைப் படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கீர்த்தி சுரேஷ் செம்ம போல்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தில் இன்டர்வல் பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் சீன் மிரட்டலாக இருந்தது.

படம் பேசும் அரசியல்

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கு இணங்க அனைவரும் சமம், மனிதர்களில் எதற்கு வேற்றுமை என்பதை படம் எடுத்துக்காட்டி உள்ளது. அது மட்டும் இல்லாமல் உக்காந்து பேசி பழகுங்கள் என்பதே படம் பேசும் அரசியல்.

இசை

வழக்கமாக படத்தின் கதையை தாண்டி ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் தியேட்டர் சிலிர்த்து போகும். ஆனால் இந்த படத்தில் ஒரு சில பாட்டுகளை தவிர, பிஜிஎம் ஸ்கோர் பெரிதாக படத்திற்கு பொருந்தவில்லை என்றே கூறவேண்டும்.

தியேட்டரில் ஸ்கோர் செய்த டயலாக்ஸ்

பன்னி வளர்த்தா அசிங்கமா இருக்கா?

யார்கிட்டயும் உட்கார்ந்து பேசி பழகுங்க

வேற்றுமை அப்படின்றது திறமையை வச்சுதான் சொல்லணும்

பரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் இந்த படமும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.