நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்.!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் சடலம் மிதந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் சடலம் மிதந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் ஒருவர் பிணம் மிதக்கிறது. மீட்பு படையினர் வந்து மீட்டால் தான் யார் என்ற முழு விவரம் தெரிய வரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.