15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை புதிய பணியிடங்களுக்கு மாற்றி தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) அந்தஸ்தில் உள்ள 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை புதிய பணியிடங்களுக்கு மாற்றி தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,

அஞ்சித் ஏ நாயர், IPS – தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

நீல் சர்மா, IPS – கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

பிஸ்வஜித் பாண்டா, IPS – திருநெல்வேலி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

கே. நேஹா, IPS – இராமநாதபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

சைந்தானே ஸ்வப்னிலா அனில், IPS – ராஜபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

தானு சிங், IPS – மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

ஆசிஷ் புனியா, IPS – சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது மதுரை மாநகர அண்ணா நகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி. அங்கிதா, IPS – தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

எஸ். இன்பா, IPS – திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

சத்ரியா கவின் DJ, IPS – கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

பிரியங்கா பார்கவ், IPS – நாகப்பட்டினம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

எஸ். அஸ்வினி, IPS – நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

மன்னம் சுஜித் சம்பத், IPS – நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

பி. மஞ்சிமா, IPS – திண்டுக்கல் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.

ராகுல் வி கோபால், IPS – திருவண்ணாமலை ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.