ஒரே மாதத்தில் 32,585 எஸ்யூவிக்களை விற்பனை செய்த மஹிந்திரா!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 32,585 எஸ்யூவி கார்களை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்திய கார் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து…

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 32,585 எஸ்யூவி கார்களை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்திய கார் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய மாடல் கார்களை வெளியிட்டு, ஹூண்டாய், டொயோட்டா, மாருதி சுசுகி, கியா போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக கார் விற்பனையில் கடும் போட்டிபோட்டு வருகிறது.

மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற மஹிந்திரா கார் நிறுவனத்தின் கார் என்றால் அது ஸ்கார்பியோ. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான இந்த கார் “Car of the Year”, “Best SUV of the Year”, “Best Car of the Year” போன்ற விருதுகளைப் பெற்று அந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தது.

இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 32,585 எஸ்யூவிக்களை விற்பனை செய்து 22.4% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் விற்பனை 26,620-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஜூன் மாதத்தில் 26,620 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 32,883 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. அதே வேளையில் ஜூன் மாதத்தில் 2,505 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களும் அடங்கும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.