நாகர்கோவிலில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கன்னியாகுமாரி, ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் (57). இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த காவலர் கோட்டார் அருகே செட்டிகுளம் பகுதியில் நண்பகல் வரை பணி செய்து விட்டு இளைப்பார கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது காவல்நிலையத்தில் மேல் தளத்திலிருந்த போக்குவரத்து காவலர் திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார்; இதனையடுத்து உடன் பணிபுரியும் சக காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் சக ஊழியர்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.அனகா காளமேகன்






