முக்கியச் செய்திகள் இந்தியா

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்; பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டிலுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தவர் மகாத்மா காந்தி. அவரை நாம் அனைவரும் தேசபிதா, தேசதந்தை என்றழைக்கிறோம். இன்று மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் நாடு முழுவதும்  தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவரின் 75வது நினைவு நாளையொடி பிரதமர் நரேந்திர மோடி  அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சபாநாயகர் ஓம்பிர்லா, டெல்லி துணை நிலை ஆளுநர் விஜய் சக்சேனா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்யொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன். அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது. மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்” என்று மோடி பதிவிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் அகிம்சை வழியில் போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மகாத்மா காந்தியின் திருவுருப படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதத்தை வைத்தோ சாதியை வைத்தோ திமுக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

மாநில முதலமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

EZHILARASAN D

ஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்

EZHILARASAN D