மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேரை கொன்று விவசாய நிலத்தில் பத்து அடி ஆழத்தில் புதைத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் மோகன்லான் என்பவரின் மனைவி மமதா பாய் (45), மகள்கள் ரூபாலி (21) திவ்யா (14) மற்றும் ரவி என்பவரின் மகள் பூஜா (15) மகன் பவன் (14) ஆகியோர் கடந்த மே மாதம் 13-ம் தேதி காணவில்லை என நெமாவாரி காவல் துறையினரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சவுகான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலைச் செய்யப்பட்ட ரூபாலி என்ற பெண்ணை சுரேந்திர சவுகானை காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு ரூபாலி சம்மதிக்க மறுத்த காரணத்தால் ரூபாலி மற்றும் அவரின் தாய், தங்கை, நண்பர்கள் இருவர் ஆகியோரை சுரேந்திர சவுகான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர் விசாரணையில் கொலை செய்த ஐந்து பேரையும் தன்னுடைய வயலில் பத்து அடி ஆழத்திற்கு குழிதோண்டிப் புதைத்ததாகவும், இந்த கொலை சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க புதைக்கப்பட்ட உடல்கள் மீது உப்பு மற்றும் யூரியாவை சுரேந்திர பயன்படுத்தி உள்ளார். இதனால் உடல்கள் சீக்கிரமாக அழுகி எலும்புக்கூடுகளாவிட்டால் அதனை மற்றவர்களாகக் கண்டுபிடிக்கமுடியாது என கூறியுள்ளார் சுரேந்திர சவுகான்.
இதனையடுத்து சுரேந்திர சவுகான் வயலில் புதைக்கப்பட்ட ஐந்து பேரின் உடல்களையும் காவல் துறையினர் ஜேசிபி உதவியுடன் தோண்டி வெளியே எடுத்துள்ளனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.







