நடிகை மந்திரா பேடி கணவர் திடீர் மரணம்: திரையுலகம் இரங்கல்!

நடிகை மந்திரா பேடியின் கணவரும் இயக்குனருமான ராஜ் கவுசல் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 49. 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக…

நடிகை மந்திரா பேடியின் கணவரும் இயக்குனருமான ராஜ் கவுசல் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 49.

2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றதால் பிரபலமானவர் மந்திரா பேடி. இந்தி சினிமா, டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் சிம்பு நடித்த ’மன்மதன்’ படத்தில் மனநல மருத்துவராக நடித்துள்ளார். பிரபாஸின் ‘சாஹோ’ படத்திலும் நடித்துள்ளார். ஜி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுசல். இவர்களுக்கு பத்து வயதில் வீர் மகன் இருக்கிறான். கடந்த வருடம் தாரா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ராஜ் கவுசல், இந்தியில். அந்தோணி கோன் ஹே, ஷாதி கா லாடூ, பியார் மேன் கபி கபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

இவருக்கு இன்று அதிகாலை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது இந்தி திரையுலகில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.