தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளிலும், தாராபுரத்தில் 302 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவும் நிலையில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக, தவெக, அதிமுக, இடதுசாரி, நாம் தமிழர் வேட்பாளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
இந்த நிலையில் காலை 9 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99% சதவிதமும், தாராபுரம் தொகுதியில் 17.55% சதவிதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதேபோல் புதுச்சேரி மாநில தட்டாஞ்சாவடியில் 19.20% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 35.55% சதவிதமும், தாராபுரம் தொகுதியில் 37.28% சதவிதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதேபோல் புதுச்சேரி மாநில தட்டாஞ்சாவடியில் 39.29% வாக்குகள் பதிவாகியுள்ளது.




