செங்கல்பட்டு அருகே வாஷிங்மெஷினில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி.இவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பராக வேலை செய்து வருகிறார்.இவரது வீட்டில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங்மெஷினை பயன்படுத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம்போல் துணிகளை துவைப்பதற்காக மெஷினில் துணிகளை போட்டுவிட்டு மிஷினை ஆன் செய்துள்ளார்.
அப்போது மிஷினில் இருந்து வித்தியாசமான சத்தமாக உஷ்,உஷ் என்று வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஆதிலட்சுமி மிஷினை எட்டிப்பார்த்தப்போது அதில் சாரை பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.இதனை கண்ட அவர் உடனடியாக மறைமலை நகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி வாஷிங்மெஷினில் பதுங்கியிருந்த பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
—-வேந்தன்







