108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக திருத்தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து மகிழ்ந்தனர்.
108 திவ்ய தேசங்களில் முக்கியமானதும்,ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப் பெற்றதுமான மதுரை கூடலழகர் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.திருவிழா நாட்களில் சுவாமிகள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கியமான நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வெகுவிமர்சையாக தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்பாலித்த சுவாமிகள் திருப்பரங்குன்றம் சாலை,மேல மாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் பக்தி கடலில் மிதந்து வந்தது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—வேந்தன்