மதுரையில் 300 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட சிந்தாமணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் 300 மூட்டைகளில் 18 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மற்றும் நெல் மூடைகளை விருதுநகரிலிருந்து மதுரைக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அரிசி கடத்தி வந்த லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.







