யூரோ கோப்பை கால்பந்து தொடரில், டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தன.
அஜர்பைஜானின் பாகு மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், செக் குடியரசு அணியை டென்மார்க் அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் தாமஸ் டெலானி முதல் கோலை பதிவு செய்தார்.
தொடர்ந்து 42வது நிமிடத்தில் டென்மார்க் அணி மற்றொரு கோல் அடித்து அசத்தியது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி முன்னிலை வகித்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியினரால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் 2க்கும் 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்றது.







