மதுரை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை

கொரோனா காலத்தில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு மதுரை மருத்துவகல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஆய்வகத்தில் தமிழகத்திலயே அதிகபட்சமாக 17.60,925…

கொரோனா காலத்தில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு மதுரை மருத்துவகல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை படைத்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஆய்வகத்தில் தமிழகத்திலயே அதிகபட்சமாக 17.60,925 கொரோனா பரிசோதனைகளை எடுத்து புதிய சாதனையை மதுரை மருத்துவக் கல்லூரி படைத்துள்ளது. அதி நவீன வசதிகள் அடங்கிய பரிசோதனை கொரோனா மையம் மதுரையில் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள 9 -RTPCR பரிசோதனை கருவி மூலம் ஒரு மணி நேரத்திற்கு 900முதல் ஆயிரம் பரிசோதனை முடிவு எடுக்கப்படும். பரிசோதனை முடிவுகள் 24மணி நேரத்திற்குள் உடனுக்குடன் வெளியிடப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மதுரை மட்டுமின்றி தஞ்சை, திருச்சி, நீலகிரி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மாதிரிகளுக்கும் உடனுக்குடன் முடிவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 1மணி நேரத்திற்குள் பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டு 2மணி நேரத்தில் முடிவுகள் பெறப்பட்டு பகுத்தாய்வு செய்யப்பட்டு 12மணி நேரத்திற்கு தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படுகிறது. மதுரை மருத்துவகல்லூரி ஆய்வகத்தில் முதன்முறையாக மருத்துவகல்லூரி நிர்வாகத்தின் சார்பில் விடிஎம்(VTM) ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டு பரிசோதனை மாதிரிகள் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8வது பரிசோதனை மையத்திற்கான அனுமதி பெறப்பட்டது.” என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 33,454 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 4,10,784 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.