அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்டப்படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்கம் செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது. இப்போது இன்னும் சில இறுதி கட்ட காட்சிகள் மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ரஜினி காந்த் நாளை மேற்கு வங்கம் செல்கிறார். மேற்கு வங்கத்தில் நான்கு நாட்கள் இறுதி கட்டப் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை.இதன் பின்னர் சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில்தான் இறுதி கட்டப்படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.