மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்

பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ள…

பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. நீர்த்தேக்க பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கிராமங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது

இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் முசாபர்பூர் பகுதியில் உள்ள அஹியாபூரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்காக படகுகளை பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். குறிப்பாக கந்தக் ஆற்றின் நீர்மட்ட உயர்வதால் அஹியாபூரில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக மழை நீர் புகுந்துள்ளது. இதனால் காவல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட்டில் பெய்துவரும் கனமழையில் அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் டேராடூன் பகுதியில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெள்ள ஆற்றை அபத்தான முறையில் கிராம மக்கள் கடந்துவருகிறார்கள். உடைந்த இணைப்பு பாலத்தை கிராம மக்கள் கடக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.


அதேபோல் இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் கனமழை பெய்துவருகிறது. ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழை காரணமாக டோடா கிராமத்தில் உள்ள காஸ்டிகார் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. சிம்லா மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.