ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு, திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தயாரிக்க உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவை எந்த அளவு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்ஸிஜன் தேவை எந்த அளவு உள்ளது என வினவிய நீதிபதிகள், செயல்படாமல் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு மையங்கள் எத்தனை உள்ளது என கேட்டனர்.

மேலும், ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையங்கள் இருந்தும் அதனை செயல்படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று சாடிய நீதிபதிகள்,
செங்கல்பட்டு உள்ள HLL பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் எத்தனை மையங்களில் உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.