கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குணசித்திர நடிகை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குணசித்திர நடிகை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 3,980 பேர் உயிரிழந் துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தொற்றுக்கு பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மும்பையில் வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன் பனாரஸ் சென்றுள்ளார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொண்டார். அவருக்கு தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.