தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரபலமானது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெறும் சந்தையில் பல்வேறு வகையான…

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரபலமானது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெறும் சந்தையில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக மதுரை மட்டுமின்றி திண்டுக்கல்,நாமக்கல் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருவர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இன்று சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. குறைந்தபட்சமாக 15,000 ஆயிரம் முதல் 35,000 ஆடுகள் அதிகளவில் விற்பனையாகின.

இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.