முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகை பூக்களால் பந்தல் அமைக்கப்பட்டு கொடிமரத்தில் மிதுன லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, மங்கல வாத்தியங்கள் மற்றும் கைலாய வாத்தியங்கள் முழங்கப்பட்டன.

உற்சவராக மதுரை மீனாட்சி, சொக்கநாதனுக்கு தங்க வைர நகைகள் மற்றும் பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கொடி மரம் அருகில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. கொடிமரத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கோயில் யானை முழு அலங்காரத்துடன் கொடி மரத்தின் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மறுநாள் 15ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.

Advertisement:
SHARE

Related posts

டிராக்டர் பேரணி; விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

Jayapriya

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை – அமைச்சர்

Halley Karthik

ஜூன் மாதத்தில் 4ம் அலை? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Saravana Kumar