10 மாதத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருச்சி போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுதான் வீட்டு வரியை உயர்த்த சொல்லியது என்கிறார்கள், மத்திய அரசு அப்படி எங்கும் குறிப்பிடவில்லை. வீண் பழி போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
10 மாதத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள், நான் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திறந்துவைத்து வருகிறீர்கள், அதிமுக பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார் என்றும், 10 மாதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்ன ? என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் துபாய் இன்ப சுற்றுலா சென்று வந்தார் என்றும் குற்றம்சாட்டினார்.
திமுக கட்சி தொண்டர்கள் பணத்தில் ஏன் அரசு அதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும் என்றும் வினா எழுப்பிய அவர், துபாய் சர்வதேச கண்காட்சி முடிய 6 நாள் இருக்கும்போது நம் முதலமைச்சர் சென்று புதிய அறங்கை திறந்து வைக்கிறார். 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்யத்தான் ஸ்டாலின் சென்றார் என்றும் குறிப்பிட்டார்.