முக்கியச் செய்திகள் செய்திகள்

கள்ளழகர் எங்கு இருக்கிறார் – தெரிந்துகொள்ள “டிராக் அழகர்” செயலி

“டிராக் அழகர்” என்ற செல்போன் செயலி மூலம் கள்ளழகர் வருகை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையின் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்பாக அனைத்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “டிராக் அழகர் என்ற செல்போன் செயலி மூலம் கள்ளழகர் வருகை குறித்து தெரிந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த செயலியின் மூலம் கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் மலைக்குச் செல்லும் வரை எந்த இடத்தில் அழகர் இருக்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இரண்டு தடுப்பணைகள் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் தடுப்பணை இல்லை, தடுப்பணை கட்டியப் பின் நடைபெறும் முதல் சித்திரைத் திருவிழா இது என்று தெரிவித்த அவர், 6 இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்ககூடும் என கணிக்கப்பட்டு உள்ளது, அதனை சீர் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் நெரிசலின்றி அழகரை தரிசனம் செய்ய
ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்

Jeba Arul Robinson

ஸ்டேன் சாமி அஸ்தியை தோளில் சுமந்து திமுக எம்.பி. அஞ்சலி

Gayathri Venkatesan

கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!

Jeba Arul Robinson