முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு

நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியதாகவும் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மீது கற்பழிப்பு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கடந்த கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து மணிகண்டனின் கட்டாயத்தின் பேரிலேயே கருக்கலைப்பு செய்ததாக நடிகை புகாரில் குறிப்பிட்டதால், கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் போலீசார் விசாரித்தனர். முன்னதாக மணிகண்டனிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் நடிகைக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்கள், ஆபாச படங்கள், நெருக்கமாக இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை மணிகண்டன் அந்தந்த நேரத்திலேயே டெலிட் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

அதனால் மணிகண்டனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2 செல்போன்களை சோதனைக்கு உட்படுத்தியுள் ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. நடிகையின் செல்போனையும் சைபர் ஆய்வுக்கு காவல்துறை உட்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்றும் திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை என்றும் கடனாக கொடுத்த ரூ.5 லட்சம் ரூபாயை திரும்பக் கேட்டதால், பிரச்சனை ஏற்பட்டதாகவும் மற்றபடி தான் நிரபராதி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement:

Related posts

எழுவர் விடுதலை: சி.வி.சண்முகம் கருத்து

Niruban Chakkaaravarthi

கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!

எல்.ரேணுகாதேவி

கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

Ezhilarasan