மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்கும் மதுரை மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 157 ஆண்டுகள் பழமையான இந்த சிறைச்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதுமான பாதுகாப்பு தொடர்பான வசதிகளை மேம்படுத்த இடம் பற்றாக்குறை நீடித்து வந்தது கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என். ரவி
இதனால், சிறைச்சாலையை மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற சிறை நிர்வாகத்தின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடைப்பாடி அருகே 100 ஏக்கரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புழல் சிறைக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நில அளவீடு பணி தொடங்கியுள்ளதால், விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப் பணி தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் பாதுகாப்புடன் கைதிகள் தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








