தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என் ரவி தொடங்கி வைத்தார். இதில் 28 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர். என். ரவி, உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் எனும் நோக்கில், அதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கல்விதான் இதற்கு முக்கிய பங்காற்ற உள்ளது என குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இதற்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியதும், கல்வியில் மாற்றத்தை கொண்டுவருவதும் மிகவும் முக்கியம் என ஆளுநர் கூறிய அவர், மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப, நமது மாணவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாக திகழ வேண்டும் என்றும், அவர்களே நமது சமுதாயத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’
மேலும் காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க, தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் துணைவேந்தர்களை வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.