சிபிஎஸ்இ 2ம் கட்ட பொதுத்தேர்வு தொடக்கம்

சிபிஎஸ்இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த டிசம்பரில் முதற்கட்ட பொதுத்தேர்வு எம் சிக்யூ (MCQ) அடிப்படையில்…

சிபிஎஸ்இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த டிசம்பரில் முதற்கட்ட பொதுத்தேர்வு எம் சிக்யூ (MCQ) அடிப்படையில் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று விரிவான பதிலளிக்கும் வகையிலான 2ஆம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது.

35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 10ஆம் வகுப்பு தேர்வை 7,407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்களும், 12ஆம் வகுப்பு தேர்வை 6,720 மையங்களில் 14.54 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். மொழி உள்ளிட்ட ஒரு சில பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், முதன்மை பாடங்களுக்கான தேர்வு வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும், சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 2-ஆக பிரித்து நடத்தும் முறை நடப்பு கல்வியாண்டுடன் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.