மதுரை புத்தக கண்காட்சி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தவிர்க்க முடியாத காரணத்தால் மதுரை புத்தக கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3-ஆம்…

தவிர்க்க முடியாத காரணத்தால் மதுரை புத்தக கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 200 ஸ்டால்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. மேலும், குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் நிகழ்ச்சியும், மாணவர்கள், பொதுமக்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல், நுண்கலை தொடர்பான பயிலரங்கமும் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் துவங்கி இருந்தது.

அண்மைச் செய்தி: ‘சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை!’

புத்தக கண்காட்சியில் தினமும் மாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் புத்தக கண்காட்சி ரத்து செய்யப்படுவதாகவும், புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.