சென்னை, கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழையாக இருந்தாலும், சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கைப்படி கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








