மதுரையில் சூடான எண்ணெய் ஊற்றப்பட்டதால் படுகாயங்களுடன் பசு சுற்றித்திரிவதாக நியூஸ் 7 தமிழில் வெளியான செய்தி எதிரொலியாக மதுரை ஆட்சியர் அனிஸ் சேகர் மற்றும் கால்நடைத்துறை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு பேர் போன மதுரையில் கால்நடைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில், சாலையில் திரிந்த கால்நடைகள் மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்திவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ,அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றிதிரிந்த பசு மீது, மர்மநபர்கள் சூடான எண்ணெய் ஊற்றியுள்ளனர். இதனால் பசு மாட்டின் உடல்முழுவதும் காயங்கள் ஏற்பட்டு சுற்றிதிரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என விலங்குகள் நலத்துறை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து மதுரை ஆட்சியர் அனிஸ் சேகர் மற்றும் கால்நடைத்துறை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.