முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அணி வேண்டுகோள்

திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் தங்கள் விவரங்களை இணைய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தகவல் தொழில்நுட்ப அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

சமூக மாற்றத்திற்கு ஏற்றாற்போல் திமுக-வில் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பு வகித்து வருகிறார். இந்த அணி, சமூக வலைதள பங்களிப்பு மட்டுமே என்கிற சமூகத்தின் கருத்தினை மாற்றி களப்பணியிலும் ஈடுபடுத்தி அவரவர் மாவட்டங்களில் உள்ள சாமானிய மக்களின் தேவைகளையும் , கருத்துக்களையும் தலைமையிடம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

தலைமைக்கும் கடை நிலை நிர்வாகிகளுக்கும் இடையேயான நேரடித்தொடர்பை உருவாக்கிடவும், கட்சி பணிகளையும், எதிர்கட்சிகளின் குறைகளையும் மக்களிடம் நேரடியாக சென்று சுட்டிக்காட்டி கட்சியை வலுப்படுத்தி நிலையான மக்களாட்சி ஏற்படுத்திட வேண்டும் என்கிற கருணாநிதியின் தொலைநோக்கு லட்சிய வார்த்தைகளுக்கு வலு சேர்த்திடும் வகையில் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியில் அவ்வப்போது, மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் விவரங்களை இணைய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி கட்சியின் சார்பு அணிகளின் நிர்வாகிகள் விவரங்களை இணைய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

இதன் மூலம் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி மு.க.ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், கட்சி சார்ந்த அன்றாட செய்திகள், தகவல்கள் மற்றும் பதிவுகளை அனைவரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

இப்பணி விரைந்து நிறைவு பெற, கட்சியின் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும், தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு தேவையான முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாத்தான்குளம் ஜெயராஜின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியம்

Jeba Arul Robinson

பணமதிப்பிழப்பு வழக்கு: நீதிபதி நாகரத்னா தீர்ப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

Jayasheeba

பெண் பலி; நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

G SaravanaKumar