மதுரையில் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை தந்தை திட்டியதால் அச்சிறுவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் ஜெயபிரசாத் (வயது 10). இவர் ஆணையூர் தனியார் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயபிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் அந்த சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த போக்கை தந்தை கண்டித்து உள்ளார்.
அதில் விரக்தி அடைந்த ஜெயபிரசாத் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







