இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,342 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. தினமும் கொரோனாவின் பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேலாக இருந்தது. ஆக்சிஜன் தடுப்பாடு, தடுப்பூசித் தட்டுப்பாடு என்று இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கே ஒரு சவாலாக அமைந்தது. இந்நிலையில் கொரோனாவின் வீரியம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவின் வீரியம் குறைந்தாலும், மூன்றாவது அலை தொடர்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது. மேலும் கொரோனாவின் முன்றாம் அலைக்கு காரணமாக டெல்டா பிளஸ் வைரஸ் அமையலாம் என்றும் இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனாவின் கடந்த 24 மணி நேரம் நிலவரம்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரைகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,12,93,062 ஆக உள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் 483 பேர் மரணமடைந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் 4,19,470 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் குணடைந்தவர்களின் எண்ணிக்கை 38,740 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை 3,04,68,079 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது 4,05,513 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 42,34,17,030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.







