முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை, பின்னர் வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் கோ.திருமுருகன் என்பவர் எழுதிய “குறள் அமிர்தம்” எனும் திருக்குறளுக்கான விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு “குறள் அமிர்தம்” நூலை வெளியிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

திருக்குறள் தமிழிசை பாடல்களை தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்று கொண்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிர மணியன், தான் மேயராக இருந்த போது, சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், அலுவலகங்கள், கட்டடங்கள் வாயில்களில் “வாயில் தோறும் வள்ளுவம்” திட்டத்தை கொண்டு வந்ததாகவும், பின்னர் வந்த அதிமுக அரசு அத்திட்டத்தை செயல்படுத்தவில்லை எனவும் குறை கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

Halley karthi

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

Saravana Kumar

27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்!

Jeba Arul Robinson