முக்கியச் செய்திகள் தமிழகம்

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குப் பதிவு காலை ஏழு மணிக்கு தொடங் கியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப் பட்டது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத் தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9-ந் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங் களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 981 பதவி களுக்கு, வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வழக்கு காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம் கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி இடத்துக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவியிடங் களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர். முதல் கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சோளக்காட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுப்பு

Saravana Kumar

மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

Jeba Arul Robinson

கொரோனாவால் ரத்தான இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: அடுத்த வருடம் நடக்கிறது

Halley karthi