வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல நேற்றிரவு முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோதையார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரோடு, காட்டாற்று வெள்ளமும் சேர்ந்ததால், மழை வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
இந்நிலையில் மோதிராமலை பகுதியிலிருந்து குற்றியார் செல்லும் வழியில் உள்ள தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது, இதனால் பழங்குடி மாணவ மாணவியர் வீடு திரும்ப முடியாமல் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பேருந்திலேயே காத்திருந்தனர். தொடர்ந்து தண்ணீர் சற்று குறைந்த நிலையில் பேருந்து சென்றது,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மம்சாபுரம், கிருஷ்ணன் கோயில், மல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளன.