சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் காலை 10.15 நிலவரப்படி திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
சைதாப்போட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் முன்னிலை பெற்றுள்ளார்.







