தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு முன்னர் மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசித்து முடிவெடுக்க சென்னை கலைவானர் அறங்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமைய்ல் இன்று அனைத்துக்கட்சி எம்.பிக்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுகஎம்.பிதுரை வைகோ, விசிக எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார், சிபிஐ என்.பிக்கள் சுப்பராயன், செல்வராஜ். கலந்து கொண்டுள்ளனர். சிபிஎம் – லிருந்து சு. வெங்கடேசன், சச்சுதானந்தம், ஐயூஎமெல் நவாஸ் கனி, காங்கிரஸ் கட்சியிலிருந்து
ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த், செந்தில், பிரவீன் சக்கரவர்த்தி, சுதா, ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக் ஆகிய 19 எம்.பிக்கள் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக, பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறையை கைவிட வேண்டும் எனவும், தற்போதுள்ள தொகுகளின் எண்ணிக்கை 543 என்பது தொடர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




